பொதுமக்களுக்கு சேவையாற் றும், வகையில், கோவை வடவள்ளி & இடையர்பாளையம் சாலையில், எம்கேஎஸ் மக்கள் சேவை மையம் எனும் தமிழ்நாடு அரசின் நலதிட்ட உதவி மையம் துவக்க விழா இன்று நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சிகளின் ஏற் பாடுகளை கவுண்டம் பாளையம் பகுதி திமுக பொறுப்புக்குழு உறுப் பினர் மு.கண்ணகி செய்திருந்தார்.
மேலும் இந்த மையத்தினை ஒருங்கிணைத்து வழிநடத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
கோவை மாநகர் மேற்கு மாவட்ட, திமுக பொறுப்பாளர் பையா கிருஷ் ணன் கலந்து கொண்டு இந்த மையத்தை ரிப்பன் வெட்டி, திறந்து வைத்து, விளக்கேற்றி மையத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக கவுண் டம்பாளையம், பகுதி பொறுப்பா ளர் கா. மதியழகன், 7வது வட்ட கழகத்தின் செயளாளர் குமரேசன், மேலும் இந்த நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தியாகராஜ், சசிபாபு, ரமணன், குணா, சண்முகம், மருத்துவர் கணேஷ், பழனி யப்பன், மைக்கேல், சரத், துரைப் பாண்டியன், மற்றும் திமுக மக ளிரணியின் சார்பில், எமிமாள், வசந்தா, துர்கா, செல்வி, ஜான்சி, சாந்தி, ரேவதி மற் றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இந்த மையத்தின் மூலமாக, பொதுமக்க ளுக்கு, முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 2021 ன் படி, அனைத்து பெண் குழந்தைகளுக்கும், ஒரு ருபாய் கூட செலுத்தாமல், மூன்று லட்சம் வரை இலவசமாக பெறும் திட்டம், வேலைவாய்ப்பு பதிவு செய்தல், பிறப்பு இறப்பு சான்றிதழ் விண்ணப்பம், சிறு தொழில் பதிவு சான்று, வாழ் நாள் சான்று, பென்சன் சேவை, திருமண பதிவு, திருமண நிதி யுதவித் திட்டம், இருப்பிட ஜாதி சான்றிதழ் போன்ற பல்வேறு பணிகளை பொதுமக்களுக்கு விண்ணப்பம் செய்து அதனை பெற்று தருகின்ற வகையில் இந்த சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.



