fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் வாகன ஓட்டுனர் அறிமுகம்

கோவையில் தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் வாகன ஓட்டுனர் அறிமுகம்

கோவையில் தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் வாகன ஓட்டுநர். அதுபற்றிய விவரம் வருமாறு: பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கோவையில் மகேந்திரா-மகேந்திராவின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர் சாரு சிண்டிகேட், தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் வாகனம் இயக்கும் அங்காள ஈஸ்வரி என்ற பெண் ஓட்டுநரை அறிமுகப்படுத்துகிறது.

மேலும் இந்த குழு தமிழகம் முழுவதும் கனரக வாகனங்களை கையாளும் துறையில் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

இதுகுறித்து பெண் தொழில் முனைவோர் திருமதி. ருக்மணி சாமியப்பன் மற்றும் திருமதி. பாரதி சக்தி பாலாஜி ஆகியோர் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசுகையில், பொக்லைன் வாகனம் ஆப்பரேட்டர் வேலைக்கு அதிக அளவு பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

இதன்மூலம் பெண்களை சமூகத்தில் உயர்த்த ஒரு காரணமாக அமைகிறது.
தொழில் முனைவோர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் தொழில் முனைவோர்களால் நடத்தப்படுகிறது.

பொருளாதார முன்னேற்றம், கல்வி, நகரமயமாதல், கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அங்கீகாரம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகரித்துள்ளனர். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img