fbpx
Homeபிற செய்திகள்கோவை யோகா பாட்டிக்கு சி.பி.எஸ்.இ. பாடத்தில் அங்கீகாரம்

கோவை யோகா பாட்டிக்கு சி.பி.எஸ்.இ. பாடத்தில் அங்கீகாரம்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில், கோவையைச் சேர்ந்த யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர், கோவையை சேர்ந்தவர். 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கி இருக்கிறார்.

இவரிடம் படித்த, 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியராக பயிற்சி அளிக்கின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டில், மத்திய அரசின் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருதும், 2018-ல் பத்ம ஸ்ரீ விருது ம்பெற்றுள்ளார். 2019-ல் இவர் காலமானார்.

பாடப்புத்தகத்தில் யோகாபாட்டி நாணம்மாள் பற்றிய குறிப்பு இடம்பெற்றதால், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், இவரை ப்பற்றி அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாணம்மாள் பாட்டியால் கோவைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img