fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவு

கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவு

கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்த, கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் 15-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மாவட்டத்தில் நிலவும் கொரோனா நோய் பர வலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக் கைகள் மேற்கொள்ள ஆட்சி யாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அண்டை மாநிலமான கேரள மாநிலத் தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் கோவை மாவட்டத்திலும் காணப்படுகிறது.

இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வர்த்தக சங்கம், ஜவுளிக் கடை உரிமையாளர்கள் சங்கம், நகைக் கடை உரிமையாளர்கள் சங்கம், அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறை அலு வலர்களுடன் ஆட்சியர் இன்று (ஆக.30) ஆலோசனை நடத் தினார்.

தமிழக அரசு ஏற்கனவே விதித்த கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்திற்கு கூடுத லாக கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் (செப்.1) முதல் விதிக்கப்படுகின்றன.

சனி, ஞாயிறு இயங்காது
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராஸ் கட் சாலை, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி. இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை (திருச்சி ரோடு), ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள் (அவிநாசி ரோடு), காளப்பட்டி ரோடு (நேரு நகர்), டி.பி.ரோடு, திருவேங்கடசாமி ரோடு, என்.எஸ்.ஆர். ரோடு, ஆரோக்கியசாமி ரோடு (கிழக்கு, மேற்கு கடைகள்), சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பேருந்து நிலைய சந்திப்பு, துடியலூர் சந்திப்பு மார்க்கெட் கடைகள், பீளமேடு ரொட்டி கடை, மைதான கடைகள், காந்திமாநகர் சந்திப்பு, ஆவாரம்பாளையம் சந்திப்பு, பாரதி நகர் (கணபதி), பாப்பநாயக்கன்பாளையம் சந் திப்பு, ராஜவீதி, பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் வீதி, என்.எச்.ரோடு, இடையர் வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, சுக்கிரவார்பேட்டை வீதி, மரக்கடை வீதி, ரங்கே கவுடர் வீதி, காந்திபுரம் 1 முதல் 11 தெருக்கள் வரை மற் றும் சல்லீவன் வீதி ஆகிய தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அத்தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறிக் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நகைக் கடைகள் மற்றும் துணிக் கடைகள், அனைத்து பூங்காக்கள், அனைத்து மால்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகின்றன.

இரவு 8 மணிக்கே கட்டுப்படுத்த வேண்டும்
மாவட்டத்தில் உள்ள அத் தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதற்கு ஏதுவாக, வாடிக்கையாளர்களை இரவு 8 மணி அளவில் கட்டுப்படுத்த வேண்டும்.

அனைத்து பணி யாளர்களும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக் கொண்டிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும், பேக் கரிகளும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங் களுக்கு மட்டும் அனுமதி மற்றும் 50 சதவிகித கடை கள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண் காணிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவிகித கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாரச் சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
பொள்ளாச்சி மாட்டுச் சந்தை தற்காலிகமாக இயங்க தடை விதிக்க ப்படுகிறது.

எல்லைகளில் கண்காணிப்பு
கேரள-தமிழக மாநில எல்லைகள் அனைத்தும் சோ தனைச் சாவடி அமைத்து கண் காணிக்கப்பட்டு வருகின்றன.

இச்சோதனைச் சாவடி வழியாக கோவை மாவட்டத்திற்குள் வரும் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும்.

சான்றுகள் இல்லையென்றால் திருப்பி அனுப்பப்படுவர்.
செப்.1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11,12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரி வகுப்புகளும் சுழற்சி முறையில் கொரோனா நிலை யானவழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து இயங்க அனு மதிக்கப்பட்டு உள்ளன.

கேரள மாணவர்கள் தினமும் வந்து செல்ல தடை
இந்நிலையில், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் தினசரி வந்து (டேஸ்காலர்) செல்ல அனுமதி இல்லை.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அனைத்து (ஸ்கூல், கல்லூரி) விடுதிகள் மற்றும் பணிபுரிபவர்களுக்காக செயல்படும் விடுதிகள் ஆகியவற்றில் தங்குபவர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என அனைவரும் தடுப்பூசிகள் செலுத் திக் கொண்டிருப்பதுடன், கொரோனா வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

கேரள மாநிலத்தில் இருந்து கல்லூரிக்கு பயிலவரும் மாணவ, மாணவிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதுடன், ஆர் டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

திருமண மண்டபங்கள்
மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண் டபங்களில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகள், இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

நடவடிக்கை பாயும்
முன் அனுமதி இல்லாமல் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட அனைத்துவித நிகழ் வுகளுக்கும் சம்பந்தப்பட்ட திருமண மண்டபம், விருந்து மண்டப உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு தெரிவித்துள்ள அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றி 50 பேருக்கு மிகாமல் திருமண நிகழ்ச்சி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட் சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img