கொரோனா காலகட்ட த்தில் பல தனியார் பள்ளிகளே மாணவர் களுக்கு முறை யாக கல்வி பயிற்றுவிக்கதிக்கு முக்காடி வரும் சூழலில் கோவையில் உள்ள மசக் காளிபாளையம் மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி பல்வேறு புதுவிதமான யுக்திகளைக் கையாண்டு மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வருகின்றனர்.
அதன்படி, கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிக ளிலேயே முதன் முறையாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலி மூலம் மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் முறையாகக் கண்காணித்து, அவர்களைத்திறம்பட செயல்பட வைக்க முடியும் என்ற நம்பிக்கை உதித்துள்ளது.
வீட்டுப்பாடம் முதல் வகுப்பறை பதிவேடு வரை அத்தனையும் அடங்கியி ருக்கும் இந்த செயலியால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான வேலைப்பழு பாதிக்குமேல் குறைந்துவிடும் என்கின்றனர் இதன் வடிவமைப்பா ளர்கள்.
அடுத்தடுத்த புது யுக்திகள் மூலம் மாணவர் நலனுக்காக பாடுபட்டு வரும் இந்த பள்ளியின் ஆசி ரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.



