கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வெள்ளி விழா மலரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
கோவை ஆடிஸ் வீதியில் செயல்பட்டு வரும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடந்த 1996-ம் ஆண்டு அப்பே £தைய மூத்த பத்திரிகையா ளர்களால் தொடங்கப்பட்டது.
நூற்றுக்கும் அதிகமான பத்திரிகை யாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் அண்மையில் நடை பெற்றன.
வெள்ளி விழாவையொட்டி கோவை யைச் சேர்ந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர்களின் புகைப்படக் கண்காட்சி ரேஸ் கோர்ஸில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெள்ளி விழாவையொட்டி கோய முத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தமுக்கிய எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கிய, கோவையின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான வெள்ளிவிழா மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மலரின் முகப்பு அட்டையை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கோவையில் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார்.
அன்றைய தினமே 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றி வரும்மூத்த இதழியலாளர்களுக்கும் அமைச்சர் ராமச்சந்திரன் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.
வெள்ளி விழாவின் முத்தாய்ப்பாக வெள்ளி விழா மலரின் வெளியீட்டு விழா தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெள்ளி விழா மலரில் மூத்த எழுத்தாளர்களின் கட்டுரைகள் கோவையின் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளதை அறிந்து தமிழக முதல்வர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளி விழா மலரை வெளியிட்டுச் சிறப்பித்தார். நிகழ்வில் கோயமுத்தூர் பத்திரி கையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.



