கோவை நாடார் சங்கம், டிரஸ்ட் ஆகியவற்றின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) நடந்தது.
தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜி. இருதய ராஜா வரவேற்றார்.
பொருளாளர் ஆர்.எஸ். கணேசன் வரவு, செலவு கணக்குகளைத் தாக்கல் செய்தார். அனைவரின் ஒப்புத லோடு வரவு-செலவு கணக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று, அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் வெகுவாக குறைந்து வருகிறது. அதற்காக முதல் வரை கோவை நாடார் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முகாம்களில் பொது மக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விரைவாக தடுப்பூசி போட்டுச் செல்லும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பிரதான சாலைகளில் அத்தியாவசிய பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள் சரிவர மூடப்படாததால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அச்சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பனை ஏறும் தொழிலாளர்களின் நலன் கருதி, பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு பதிலாக பனங்கருப்பட்டி, பனங் கற்கண்டு ஆகியவற்றை விநியோகம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் பொன்.செல்வராஜ் நன்றி கூறினார்.
துணைத் தலைவர் கே.டி.சோமசுந்தரம், செயலாளர்கள் பொன்.செல்வராஜ், ஆர்.அன்புராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் யு.பொன் பாண்டியன், ஜே.அருள், எஸ்.சகாதேவன், ஆர்.ஆனந்தபாண்டி, டி.சிவசேகர்,
ஏ.தங்கதுரை, எஸ்.நாராயண செல்வன், பி.செல்வகுமார், ஏ.அத்திவேல், ஜே.சாமு வேல்ராஜ், கே.சேகர், கே.எஸ். தாமஸ் செல்வ மனோகர், வி.ஆர்.வேலு மயில், ஏ.ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



