fbpx
Homeபிற செய்திகள்கோவை குனியமுத்தூரில் மிலாது விழா ஊர்வலம் - சிறப்புப் பிரார்த்தனை

கோவை குனியமுத்தூரில் மிலாது விழா ஊர்வலம் – சிறப்புப் பிரார்த்தனை

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்று அழைக்கப்படும் முஹம்மது நபியின் பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் மிலாது விழாவாகக் கொண் டாடப்பட்டு வருகிறது.

கோவை குனியமுத்தூர் பாரதி நகர் பகுதியில் உள்ள ஜாமியத் ஷேக் ஆதம் ஹஷரத் அகாடமி சார்பாக மிலாது நபி விழா ஊர்வலம் நடைபெற்றது. இதில் மதரஸா பள்ளி மாணவர்கள், இளை ஞர்கள் கைகளில் தப்ஸ் இசைத்தவாறு நபிகள் நாயகத்தின் புகழைப் பாடிச் சென்றனர்.

முன்னதாக மத நல்லிணக்கம் வேண்டியும் கொரோனா பெருந்தொற்று போன்ற அனைத்து நோய்களில் இருந்தும் உலக மக்களை காக்கவும், உலக அமைதிக்காகவும் மதரஸா பள்ளியில் சிறப்பு துவாஆ மற்றும் பிரார்த்தனை செய் யப்பட்டது. குனியமுத்தூர் பாரதி நகர் பகுதியில் துவங்கிய ஊர்வலத்தில் சிறுவர், சிறுமியர் நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குனிய முத்தூர், பாலக்காடு சாலை, பிருந்தாவன் நகர் போன்ற பகுதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் மதரசாவை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகள் இனிப்புகள், பிஸ்கட்டுகள், ஜூஸ் போன்றவற்றை வழங்கி மிலாது விழா வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதேபோல கோவை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் மீலாது நபி விழாவை முன்னிட்டு சுன்னத் ஜமாஅத் யூத் பெடரேஷன் சார்பில் சிறப்புப் பிரார்த்தனை நடை பெற்றது. இதில் மௌலவி முஹம்மது அலி கலந்து கொண்டு அனைவருக்காகவும் பிரார்த் தனை செய்தார்.

பிறகு அப்பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தஃப்ரூக் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் ஹாஜி இதயத்துல்லா, சுன்னத் ஜமத் யூத் பெடரேஷன் தலைவர் சைஸில் மற்றும் பள்ளிவாசல் இமாம்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img