fbpx
Homeபிற செய்திகள்கோவை கிழக்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை கிழக்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பல்வேறு இடங்களில் ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேற்று (செப்.28) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.67-க்கு உட்பட்ட திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகிலும், 64-வது வார்டுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி பெர்க்ஸ் ஆர்ட்ஸ் அருகிலும், தூர்வாரப்பட உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை பார்வையிட்டார் ஆணையாளர்.

மழைநீர் வடிகால் கால்வாயில் உள்ள அடைப்புகளை தூய்மைப் பணியாளர் களைக் கொண்டு தூர்வாரி, தேங் காமல் சீராக நீர் செல்லும் வகையில் பணிகளை செய்திட வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்தார்.

உப்பிலிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட் டிடம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிங்காநல்லூர் கமலாமில் குட்டை ரோடு மழைநீர் வடிகால் கால்வாய் பகுதிகளை பார் வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

அங்குள்ள பொதுக் கழிப்பிடம் சுகாதாரமான முறையில் உள்ளதா என ஆய்வு செய்தார். வார்டு எண்.58க்கு உட்பட்ட நீலிக்கோணாம் பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் ஆணையாளர்.

கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய், சேய்களுக்கு போடப்ப டும் தடுப்பூசிகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.

கபிலன் கார்டன் பகு தியில் சுகாதார மையம் கட்டுவதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் குமார் இரத்தினம், நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், மண்டல சுகாதார அலுவலர் முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img