fbpx
Homeபிற செய்திகள்கோவை எழுத்தாளருக்கு அப்துல்கலாம் விருது

கோவை எழுத்தாளருக்கு அப்துல்கலாம் விருது

புதுவை தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பும் யோகி பதிப்பகமும் இணைந்து தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பன்முக சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவை நடத்தியது.

விழாவில் கோவையை சேர்ந்த தமிழ் எழுத்தாளர் டி.வி.விஜயகுமார் சிறந்த பன்முக கலைஞர் ஆக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை புதுவை தமிழ் சங்கம் தலைவர் முனைவர் முத்து வழங்க,கோவை எழுத் தாளர் டி.வி.விஜய குமார் பெற்றுக் கொண்டார்.

திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு தலைவர் புதுவை சரவ ணன், கவிஞர் பாரதி சுகுமாறன், முனைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img