கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட, மணியகாரன்பாளையம் மவுன்டன் வியூ அருகே உள்ள கௌசிகா நதி செல்லும் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக் கப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இதனை அறிந்து கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பையாக்கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் அதிகாரிகளுடன் சென்று சம்மந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயணிக்க தற்காலிக பாதையும், மழைக்காலம் முடிந்து ஓடையில் நீர்வரத்து குறைந்தவுடன் நிரந்தரமாக புதிய பாலமும் அமைத்துத் தரும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
மேலும் அத்திப் பாளையம் கிரா மத்தில் உள்ள காமராஜர் நகரில் கனமழையால் தாழ் வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களையும், மழையால் சேதமடைந்த வீடுகளையும் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர், அன்னூர் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், 3 கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க ஒன்றிய கழகச் செயலாளர் – பேரூர் கழகச் செயலாளர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



