68வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் முதல்நாள் நிகழ்வில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அங்கப்ப செட்டியார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கூட்டுறவுக் கொடி ஏற்றினார்.
அருகில் கூடுதல் பதிவாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஆர்.இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் பாரதி மற்றும் வங்கி பணியாளர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



