fbpx
Homeபிற செய்திகள்கொரோனாவால் பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு ரூ.1.05 கோடி நிவாரண நிதி அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி...

கொரோனாவால் பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு ரூ.1.05 கோடி நிவாரண நிதி அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்

இலங்கை தமிழர் நலன் ஆலோசனைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று அமைச்சர் கே.எஸ் மஸ்தான், உயர்கல்வி அமைச்சர் பொன்முடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்

விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு ரூ .1.05 கோடி மதிப்பீட்டில் நிவ £ரண நிதியுதவிக்கான காசோலையினை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாத் , சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), டாக்டர்.இரா.இலட்சுமணன் (விழுப்புரம்) , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கணேசன் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img