fbpx
Homeபிற செய்திகள்கொரோனா பாதித்த கைதிக்கு ஜாமீன்: கோவை கோர்ட்டு உத்தரவு

கொரோனா பாதித்த கைதிக்கு ஜாமீன்: கோவை கோர்ட்டு உத்தரவு

கோவையில் கொரோனா பாதித்த கைதிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த மோகனன் (47), என்பவர் போலியாக மது தயாரித்து விற்பனை செய்ததாக, கடந்த ஜூன் 28-ல், கைது செய்யப்பட்டார்.

கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில், தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து, அவரை ஜாமீனில் விடுவிக்க கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம், மோகன னுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

படிக்க வேண்டும்

spot_img