fbpx
Homeபிற செய்திகள்கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் முன் களப்பணியாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் கோவை மாநகராட்சி ஆணையாளர்...

கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் முன் களப்பணியாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளர்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாந கராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா கேட்டுக் கொண்டார்.

கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம், நீர் உந்து நிலையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் ஆர். எஸ்.புரம் மல்டிலெவல் கார் பார்க்கிங் கட் டப்பட்டு வரும் பணி கள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (ஆக.11) பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.9-க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் ஆணையாளர்.

கொரோனா தடுப்பு ப்பணிகளை மேற் கொள்ளும் முன் களப் பணியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வீடு, வீடாகச் சென்று பொது மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், உடல்சோர்வு, உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணிகளை மேற்கொள்ளும் போது, அதன் விபரங்களை கோவிட்-19 கள ஆய்வு பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக கொரோனா கட்டுப்பாட்டறை மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
பணிமேற் கொள்ளும் போது முகக்கவசம் அணி ந்து பணியாற்ற வேண்டும்.

கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தங்களுடையபணிகளைசிறப்பாகசெய்து,கொரோனாதடுப்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆணையாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து வார்டு எண்.8ல் கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட கவுண் டம்பாளையம், வடவள்ளி, வீர கேரளம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்திக்கான நீர் உந்து நிலையத்தில் குடிநீர் விநியோகப்பணிகள் குறித்து பார் வையிட்டு ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

சீர்மிகு நகர திட் டத்தின் கீழ் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட செல்வம்பதி குமாரசாமி குளங்கள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் திவான் பகதூர் சாலையில் 80 சதவீதம் பணிகள் முடிவுற்ற நிலையில் மல்டிலெவல் கார்பார்க்கிங் கட்டப்பட்டு வரும் பணிகள் நடை பெற்று வருவதையும் அவர் பார்வையிட்டார்.

ஆய்வின் போது மேற்குமண்டல உதவி ஆணையாளர் ஆர்.சுந்தர் ராஜன், மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன், உதவி பொறியாளர் விமல், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img