தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடந்த நூறு ஆண்டுகளாக மக்களுக்கு சேவை வழங்கி வருகிறது.
வங்கியின் வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாக கோவை மாநகரில் கடந்த நவம்பர் 11ம் தேதி காலையில் பெரும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவில், கோவை மருத்துவக்கல்லூரியின் டீன் டாக்டர் ஏ.நிர்மலா அவர் கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செங்குந்தர் மகாஜன சங்கத் தலைவர் திரு.கே.பி.கே.செல்வராஜ் மற்றும் கோவை தொழிலதிபர் திரு.கனக்லால் அபய்சந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வங்கியின் முன் னாள் பொது மேலாளர் திரு. செந்தில் ஆனந்தன், துணை பொது மேலாளர் திரு.ராஜ்மோகன் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் சிறப்புரை வழங்கினர்.
இவ்விழாவில் கடன் வழங்கும் நிகழ்ச்சியும், தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வும் கோவிட் பேரழிவின் போது, உயிரை துச்சமென பணியாற்றிய முன்களப்பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை வங்கியின் பொது மேலாளரும், கோவை மண்டல மேலாள ருமான திரு.எம்.ராமநாதன் மற்றும் வங்கியின் மேலாளர்கள், ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். உதவி பொது மேலாளர் திரு.எஸ்.பழனிக்குமார் நன் றியுரையுடன் விழா சிறப்புற முடிவுற்றது.



