fbpx
Homeபிற செய்திகள்கேஜிஐஎஸ்எல் நிறுவனம் மறுசீரமைப்பு இரு முதன்மை நிறுவனங்களாக செயல்படும்

கேஜிஐஎஸ்எல் நிறுவனம் மறுசீரமைப்பு இரு முதன்மை நிறுவனங்களாக செயல்படும்

கேஜி இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிட் நிறுவனம், குளோபல் சாப்ட்வேர் சர்வீஸ் மற்றும் பிசினஸ் சப்போர்ட் சர்வீசஸ் ஆகிய இரண்டு பிரிவுகளும் இரு முதன்மை நிறுவனங் களாக செயல்படுவதற்கு அதன் இயக்கு நர்கள் குழு அண்மையில் ஒப்புதல் அளித் துள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அசோக் பக்தவத்சலம் கூறுகையில், “இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக பல மடங்கு வளர்ச்சியை கண்டு வருகிறது.

பெருந்தொற்று காலகட்டத்துக்குப் பிறகு தற்போது மிகப் பெரிய வணிக வாய்ப்புகள் உருவாகியுள்ளதால், சாப்ட்வேர், பிசினஸ் சப்போர்ட் ஆகிய வணிகங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஆகவே இரண்டு பிரிவுக ளையும் இரு நிறுவனங்களாக செயல்பட அதிகாரமளிப்பதன் மூலம் அவற்றின் உண்மையான ஆற்றலையும், தங்களது செயல்பாடுகளை மேம்படுத்தும் பிரத்யேக யுக்திகளையும் தொடர முடியும் என நம்புகிறேன்” என்றார்.

கேஜிஐஎஸ்எல் டெக்னாலஜிஸ் நிறுவனத் தின் இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி பிரசாத் சண்முகம் கூறுகையில், “கேஜிஐஎஸ்எல் டெக்னா லஜிஸ் நிறுவனம் என்பது வங்கி, காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் சொத்து மேலாண்மை பிரிவுகளில் கவனம் செலுத்தும் ஒரு பன்முக தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமாகும்.

இவ்வாறு இரு தனி நிறுவனங்களாக செயல்படுவது தங்களது செயல்பாடுகள் மற்றும் சுதந்திரமான யுக்திகளை மேற் கொள்வதற்கான நடவடிக்கையாகவும், வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்வதன் வாயிலாக, சிறப்பான பலன் களை அளிக்க இயலும்.

உதாரணமாக, CAPEX அல்லதுOPEX மாதிரியான தயாரிப்புகள் அல்லது SAAS/PAAS/Cloud@Customer/On Premise models போன்ற தயாரிப்புகளை வழங்க இயலும்” என்றார்.

கேஜி இன்விக்டா நிறுவனத்தின் இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி ஜெயமுரளி பாலகுருசாமி கூறுகையில், “மக்கள், செயல்முறை மற்றும் தொழில் நுட்பத்தின் வாயிலாக அதிகரித்து வரும் வணிக மதிப்பை வழங்குதல்” என்பதை புதிய பிராண்ட் தனது நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த மாற்றம் அனைத்து தொடர்புகளிலும் நிறுவனத்தின் அடையாளத்தை மறு சீரமைப்புக்கு உள்ளாக்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுடான மேம்பட்ட அனுபவம், அதிவேக வளர்ச்சி, செயல்படும் ஆற்றல் ஆகியவற்றை தடையின்றி அடைய முடியும்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img