கிராமப்புற மக்களும் கல்வி பெற வித்திட்டு வழிவகை செய்தவர். கல்விக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் தி.சு.அவினாசிலிங்கம் என்று தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்க ழகத்தின் மேனாள் துணை வேந்தர் இ.சுந்தரமூர்த்தி பேசினார்.
அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் சார்பாக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் தி.சு.அவினாசிலிங்கம் நூற்றுப் பத்தொன்பதாவது ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று (மே 5) கொண்டாடப்பட்டது.
ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனை வர் தி.ச.க.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:
சென்னை மாகாணத்தின் முதல் கல்வி அமைச்சராக இருந்து கல்விப் பணிக்காக தம் மையே அர்ப்பணித்தவர்.
அந்த கால கட்டத்தில் திருக்குறளைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் பதிவு செய்தார். தமிழை முதன் முதலில் நம் பாட மொழியாக்கியதும், பாரதியா ரின் கவிதைகளையும் அவரது படைப்புகளையும் நாட்டு டமையாக்கி அரசு பதிப்பாக வெளியிட்ட பெருமை அவ ரையே சேரும்.
நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகச் செம்மல். காந்தியுடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக் கத்தில் தன்னை ஈடுபடுத்தி நாட்டுக்காக உழைத்தார்.
தன்னுடைய இருபது வயதி லேயே ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், சுவாமி சிவானந்தா ஆகியோரின் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்ந்தார் என்றார்.
பல்கலை. வேந்தர் பேரா சிரியர் ச.ப.தியாகராஜன் வாழ்த்துரையில், மகளிர்கல்விக் காக பாடுபட்ட மாமனிதர்.
உழைப்பினாலும், விவேகத்தா லும் தான் மேற்கொண்ட அனைத்து செயல்களிலும் அரும் பெரும் சாதனைகளை நிகழ்த்தினார் என்றார்.
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் மற்றும் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத் திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் இ.சுந்தர மூர்த்தி பேசியதாவது:
ஜாதி, மத பேதமற்ற கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக ராம கிருஷ்ணா மிஷன் மற்றும் சாரதாலயம் எனும் நிறுவனங் களை உருவாக்கி கிராமப்புற மக்களும் கல்விபெற வித்திட்டு வழிவகை செய்தவர்.
கல்விக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது மூலம் இந்தியாவை முன்னேற்றிச் செல்லலாம் என்ற விவேகா னந்தரின் மொழிகளை பின்பற்றி செயலாற்றியவர். அரசியலை அறமாகப் பார்த்த வர். ஆன்மீகத்தோடு கூடிய கல்வியை வழங்குவதில் தலை சிறந்தவராகத் திகழ்ந்தார் என்றார்.
கோயம்புத்தூர் ஸ்ரீலலிதாம் பிகா அறக்கட்டளையைச் சார்ந்த சுவாமிஜி ஸ்ரீஜகதத் மானந்தா சரஸ்வதியின் வாழ் வியல் மதிப்பீட்டுக் கல்வி என்னும் நூலை பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி வெளியிட்டார்.
சுவாமிஜி ஸ்ரீஜகதத்மானந்தா சரஸ்வதி தமது ஏற்புரையில், கல்வியின் மூலம் அறிவு தாகம், பௌதீக தாகம், ஆன்ம தாகம் நிறைவு செய்யப்படுகிறது. ஏழை மாணவர்களுக்கு இம்மூன்று தேவைகளையும் நிறைவு செய்வதற்கு கட்டணமில்லா கல்வி அளித்தார்.
முயற்சி மற்றும் எண்ணங்களின் தூய்மையே ஒரு மனிதனை இறைவனை அடையச் செய் யும். இன்பத்தில் மனம் திளைக்காதவனே ஞானத்தில் முனி எனப்படுகிறான்.
தமிழ் மொழிப்பற்றுக் கொண்டவர். ஒரு மொழியை நிலை நிறுத் துவதற்கு பிற மொழிகளை வெறுப்பது உண்மையான மொழிப்பற்று அன்று. மொழிப் பற்றையும் தெய்வீகப் பற்றையும் இரு கண்களாகக் கொண்டவர் என்று குறிப்பிட்டார்.
அவினாசிலிங்கம் பல்கலை. மேனாள் வேந்தர் மற்றும் வாழ்நாள் அறங்காவலர் முனைவர் க.குழந்தைவேல், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் மனையியல் புல முதன்மையர் முனைவர் ந.வாசுகி ஆகியோர் உரை யாற்றினர்.
கூட்டுப்பிரார்த்தனையும், நினைவு மண்டபத்தில் உள்ள அவினாசிலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பல்கலை. துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிச ங்கர் வரவேற்றார். பல்க லை பதிவாளர் முனைவர் கௌ சல்யா நன்றி கூறினார்.



