சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள், திராவிட தமிழர் கட்சி, சி.பி.ஐ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தோர் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



