காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி மற்றும் வீரணம்பாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.42.78 இலட்சம் மதிப்பீட் டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திடட்ப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத்.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினீத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததா வது: ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும்.
ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதி களையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதுரூபவ் சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை நோக்கமாகும்.
வறுமை ஒழிப்பு மற்றும் கிரா மப்புற மக்களுக்குத் தரமான சேவை களை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அமைகின்றன.
இந்த அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்துத்தரமான வாழ்விற்குத் தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும் பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் நோக் கங்களை எய்திடும் வகையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தங்தள் கடமை களை திறம்பட நிறைவேற்றிட வழி வகை செய்தல் ஆகிய பொறுப்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையை சார்ந்ததாகும்.
குக்கிராம அளவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, சுகாதாரத்தினை மேம்படுத்தி, இயற்கை வளங்களைக் காத்து, கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, வறுமையை அகற்றிட ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்றைய தினம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பரஞ்சேர்வழி ஊராட்சி கலைஞர் நகரில், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.13.60 இலட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் கட்டப்படுகின்றன். பரஞ்சேர்வழி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி நடக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.06 இலட்சம் மதிப்பீட்டில் பெண்கள் கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வரு கிறது. பரஞ்சேர்வழி ஊராட்சி சண் முகம்பாளையத்தில் ரூ.0.87 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய பராமரிப்புப் பணி நடக்கிறது.
பரஞ்சேர்வழி ஊராட்சி மாரணம்பாளையம் ஓடையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15.11 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.04 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவர்கள் கட்டப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் ரூ.42.78 இலட்சம் மதிப் பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. இப் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென துறை சார்ந்த அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.
ஆய்வின் போது, காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், செய்தியாளர்கள் உடன் இருந்தனர்.



