கோவை அவினாசி ரோட்டில் உள்ள ரெசிடென்சி டவர் ஓட்டலில் கலஷாபைன் ஜூவல்ஸ் நிறுவனம் சார்பில் அபர்னா சுங்கு வடிவமைத்த சிறப்பு நகைகள் கண்காட்சி விற்பனை தொடக்கவிழா இன்று (28-ந்தேதி) நடைபெற்றது.
விழாவுக்கு வந்த அனைவரையும் கலஷா இயக்குனர் அபிஷேக் சந்தா வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரியங்கா சுந்தர், தேவி, ஜஜரியா, ரஜிதா எம்.ராஜா, டாக்டர் கற்பகம் முரளி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.
இதுகுறித்து கலஷாபைன் ஜூவல்ஸ் நிறுவன இயக்குனர் அபிஷேக் சந்தா நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த தங்க நகைகள் கண்காட்சி விற்பனையில் பாரம்பரிய கலைநயமிக்க தங்க நகைகள் வைர நகைகள், பிளாட்டினம் நகைகள் இடம்பெற்று உள்ளன.
மகளிர் விரும்பும் பல்வேறு மாநில அளவிலான நகைகள் இந்த கண்காட்சி விற்பனை அரங்கில் இடம்பெற்று உள்ளன. இந்த வாய்ப்பை கோவை மக்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தங்க நகைகள் விற்பனை கண்காட்சி இன்று (28-ந்தேதி தொடங்கி வருகிற 30ந்தேதி முடிய3 – நாட்கள் நடக்கிறது. மேற்கண்டவாறு அவர் கூறினார்.



