கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கோவையில் சிஐடியு கட்டிடம் கட்டும் தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும். நலவாரிய ஆன்-லைன் பதிவை எளிதாக்க வேண்டும். கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் பணியிடத்தில் பெண்களுக்கான கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.
தொழிலாளிக்கு மாத ஓய்வூதியம் 3ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இயற்கை மர ணத்திற்கு 2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை காந்திபுரத்தில் சிஐடியூ கட்டிடம் கட்டும் தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் முருகையா தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



