fbpx
Homeபிற செய்திகள்கங்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் விளக்கேற்றும் விழா

கங்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் விளக்கேற்றும் விழா

கோவை வட்டமலைபாளை யத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலியர் பட்டயப் படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் களுக்கான விளக்கேற்றும் விழா, கல்லூரியின் புதிய அரங்கத்தில் நேற்று (18ம் தேதி) நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ரமா ராஜசேகரன் வரவேற்றுப் பேசினார்.

விழாவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த சிறப்பு அழைப்பா ளர்கள் குமுதா பழனிசாமி, (துணைத் தலைவர், இந்திய செஞ்சிலுவை சங்கம்), டாக்டர் எஸ்தர் ஜான் (டீன் மற்றும் கல்லூரி முதல்வர்) ஆகியோர் முதலாம் ஆண்டு பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு மாணவர்கள் கைகளில் ஏந்திய விளக்குகளில் ஒளியை ஏற்றி வைத்தனர்.

நாங்கள் ஒரு அர்ப்பணிப்பு உள்ள செவிலியராக கடமையாற்று வோம் என்று துணை முதல்வர் பேராசிரியை புஷ்பா, கூற அதனை மாணவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தலைமை விருந்தினராக பங்கேற்ற டாக்டர் எஸ்.ராஜசபாபதி, (பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர், புனரமைப்பு மைக்ரோ சர்ஜரி & தீக்காயம், கங்கா மருத்துவமனை) பேசுகையில், ஒவ்வொரு செவி லியருக்கும் தங்கள் தொழிலில் தன்னலமற்ற சேவை அவசியம்.

தகவல் தொடர்புத் திறன், உணர்ச்சி நிலைத்தன்மை, ஆலோசகர், கல்வியாளர் போன்ற அடிப்படைக் குணங்கள் செவிலியர்களுக்கு இருக்க வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செவிலியர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் நோயாளிகளுக்கான பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்து ரைத்தார். சிறப்பு அழைப்பாளர் குமுதா பழனிசாமி பேசும்போது, செவிலியர் துறையை தேர்ந்தெடுத்த மாணவர்களைப் பாராட்டினார்.

மேலும் சமூக அக்கறை, ஏழை நோயாளிகளிடத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும் என்றும் நோயாளியை கவனிப்பதற்கான ஆர்வம், பணிவு, நெறிமுறைகள் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப் பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பல்வேறு துறைகளைச்சார்ந்த செவிலியர்களின் சேவையை காட்சிப்படுத்தும் விதமாக கொலு வைக்கப்பட்டு இருந்தது. விழாவில் அனைவருடைய கவ னத்தையும் ஈர்க்கும் விதமாக ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் “¬ளா விளக்கு ஏந்திய காரிகை” என்பதை விளக்கும் வகையில் மாணவி ஒருவரும், புதுமையான புதிய சகாப்தத்தை சித்தரிக்கும் வகையில் விண்வெளி ஓடத்தில் விண்வெளி செவிலியராக ஒரு வரும் தத்ரூபமாக நடித்து அசத்தினர்.

முடிவில் டீன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்தர் ஜான் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img