ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் (ICICI Prudential Life Insurance) நிறுவனம், ’ஐசிஐசிஐ ப்ரூ எதிர்காலத்திற்கான உத்தரவாதமான வருமானம்’ (ICICI Pru Guaranteed Income for Tomorrow) (நீண்ட காலத்திற்கானது) எனும் ஒரு புதிய பங்கேற்பு அற்ற சேமிப்புத் திட்டத்தை [[non-participating savings product] அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டமானது உத்தரவாதமான வரிகளற்ற வருமானத்தைச் (guaranteed tax-free‘Income’) சீராகப் பெறுவது அல்லது வருமானத்துடன் 110% பிரீமியத்தை திரும்பப் பெறுவது (Income with 110% Return of Premium) என்று இரு வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
தொகையைத் திரும்பப் பெறும் காலம் உட்பட பாலிசி காலம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பு வழங்கப்படுவதால், நம் பிரியத்துக்குரியவர்களுக்கு இது நிதிப் பாதுகாப்பை அளிக்கும்.
வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளுக்கேற்ப 7 அல்லது 10 ஆண்டுகள் பிரீமியம் ஆண்டு காலத்தைத் தேர்வு செய்யலாம். இதன் மூலமாக 15, 20, 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு வருமானத்தைப் பெறும் வாய்ப்பைப் பெற முடியும்.
குழந்தைகளின் உயர் கல்வி, ஓய்வுக்கால திட்டங்கள் உட்பட வாடிக்கையாளர்களின் நிதி இலக்குகளுக்குத் துணை நின்று நிலையான வருமானத்திற்கான மாற்று வழியைக் கட்டமைக்க உதவுவதால், இந்த பன்முக சேமிப்புத் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது.
இது வாடிக்கையாளர்களின் எதிர்கால வருமானத்திற்கான நிச்சயமற்றதன்மையைப் பெருமளவுக்கு போக்குகிறது.
‘தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள்’ (Save the Date) எனும் சேவ் தி டேட் அம்சமானது ஒரு குறிப்பிட்ட தேதியில் வருமானத்தைப் பெறுவதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது;
இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களது திருமண நாள், மனைவியின் பிறந்த தினம் உள்ளிட்ட சிறப்பு நாட்களன்று வருமானம் பெறுவதைத் தொடங்க முடியும்.
இது, குறிப்பிட்ட முக்கியத்துவமுள்ள நாட்களன்று வருமானம் பெற உதவுகிறது.



