எஸ்என்எஸ் செவிலியர் கல்லூரியில், செவிலியர் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விளக்கு ஏற்றும் விழா நடந்தது.
எஸ்என்எஸ் கல்லூரி யின் தலைவர் டாக்டர் எஸ்.என். சுப்பிரமணியன், தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தலைமை விருந்தினர் பிஎஸ்ஜி மருத்துவமனை, செவிலியர்கள் கண்காணிப் பாளர் டாக்டர் எம்.டி. அனுராதா, எஸ்என்எஸ் தொழில்நுட்ப முதல்வர் செந்தூர பாண்டியன், எஸ்என்எஸ் கல்லூரி மனித வள இயக்குநர் டாக்டர் லலித் மிஷ்ரா, செவிலியர் கல்லூரி முதல்வர் கவிதா துணை முதல்வர் பாரதி ஆகியோர் செவிலியர் மாணவர்களின் கையில் உள்ள விளக்கின் ஒளியை ஏற்றி வைத்தனர்.
செவிலியர்கள் சேவையை போற்றும் வகையில் மாணவர்களின் அர்ப்பணிப்பு பாடல் களைப் பாடினர்.
கை விளக்கு ஏந்திய காரிகையின் உறுதிமொழியை துணை முதல்வர் பாரதி கூற மாணவர்கள் உறுதி மொழியை ஏற்றுக் கொண் டனர். டாக்டர் எம்.டி.அனு ராதா பேசும்போது, செவிலியர் தொழில் மிகவும் உயர்ந்த தொழில்.
அனைவரும் அதை உணர்ந்து நோயாளிகளிடம் அன்போடும், பணிவோடும், அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும். தங்கள் துறை யில் சிறந்து விளங்க ஒழுக்கம், நேர்மை போன்ற அடிப்படை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப் பிட்டார். துணை முதல்வர் பாரதி நன்றி கூறினார்.



