fbpx
Homeபிற செய்திகள்என்ஜினீயரிங் பகுதிநேர படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் சி.ஐ.டி. கல்லூரி முதல்வர் ராஜேசுவரி பேட்டி

என்ஜினீயரிங் பகுதிநேர படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் சி.ஐ.டி. கல்லூரி முதல்வர் ராஜேசுவரி பேட்டி

கோவை சி.ஐ.டி. கல் லூரி முதல்வர் பொறுப்பு ராஜேசுவரி, ஒருங் கிணைப்பாளர் டாக்டர் இளங்கோ ஆகி யோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப் போது அவர்கள் கூறிய போது:

தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2021&22ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர முதலாமாண்டு பி.இ./பி. டெக். பட்டப் படிப்புகளுக்கான விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த கல்வியாண்டில் விண்ணப்பிப்பதற்கான பதிவு, விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, தரவரிசை மற்றும் கலந்தாய்வு ஆகியவை இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடை பெறும். ஆன்லைன் விண்ணப்பம் 6-6-2021 தொடங்கி 5-9-2021 மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட கல்லூரிகளுக்கு நடைபெறும்.

அரசினர் தொழில் நுட்ப கல்லூரி, கோயம் புத்தூர்-641 013
அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் – 636 011
அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி – 630 004
தந்தை பெரியார் அரசினர் கல்லூரி, பர்கூர் – 635 104
பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 004
கோவை தொழில் நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 014
தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை – 625 015 ஆகிய 9 கல்லூரிகளுக்கு மாண வர்கள் சேர்க்கை நடைபெறும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார் கள்.

படிக்க வேண்டும்

spot_img