புதுமையான உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், அதன் எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு, எந்தவித தொந்தரவும் இல்லாத சேவையை வழங்கும் விதமாக ‘எக்ஸ் கேர் திட்டம்’ என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அனைத்து எக்ஸ்70 ஸ்மார்ட்போன் வாடிக்கை யாளர்களுக்கும் ஆன்லைன் மூலம் நேரடி யாக செயல்விளக்க அமர்வுகளும், மேலும் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வீட்டில் டெலிவரி செய்தல் மற்றும் வாடிக்கையாளர் வீட்டு வாசலுக்கே சென்று பழுது நீக்கும் சேவைகள் போன்றவற்றை வழங்குகிறது.
இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள விவோவின் அனைத்து சேவை மையங்களிலும் கிடைக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையா ளர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் இந்நிறுவனத்தின் அனுபவமிக்க தொழில்நுட்ப நிபுணர்கள் வழங்குவார்கள்.
இந்த சேவைகளை பெற வாடிக்கையாளர்கள் நேரடியாக தொலைபேசி மூலமாகவோ அல்லது மெய்நிகர் மூலம் தயாரிப்பு சேவைகள் மற்றும் பராமரிப்பு சேவைகளை பெறுவதற்கு +91 89557 71110 என்ற எண்ணிற்கு, மாநிலம் மற்றும் பின்கோடு ஆகியவற்றை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
இந்த திட்டத்தில் வாரத்தில் 7 நாளும் 24 மணி நேரமும் வாடிக்கையா ளர்களுக்கு சேவை அளிக்கப்படுகிறது. இதில் பிரீமியம் வாடிக்கையாளர்கள் நேரடியாக முகவர்களை தொடர்பு கொண்டு பேசலாம்.
எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்குவதற்காக இதன் சேவை மையங்களில், பிரத்யேக சேவை பிரிவும் துவக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல் இந்த வாடிக்கையாளர்களுக்கு அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே ஆகிய நகரங்களில் வீடுகளுக்கே வந்து டெலிவரி மற்றும் பழுதுநீக்கும் சேவையும் வழங்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் விவோ நிறுவனம் எக்ஸ்70 புரோ, எக்ஸ்70 புரோ பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
இரண்டு ஸ்மார்ட்போன்களும் தொழில்முறை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்ற கேமராவுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.



