திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிஊராட்சி ஒன்றியம், காவுத்தம்பாளை யம், செங்காளிபாளையம், கருமஞ்சிறை, கூனம்பட்டி, கஸ்தூரிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.46.69 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினீத் (நவ.17), ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் கருமஞ்சிறை ஊராட்சியில் ரூ.5.36 இலட்சம் மதிப்பீட்டில் நீர் வரத்து கால்வாயில் அமைக்கப்பட்ட புதிய பண்ணைக்குட்டை, அத்திப்பட்டி காலனியில் ரூ.5.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறு பாலம், காவுத் தம்பாளையத்தில் ரூ.9.79 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்பப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர், ரூ.3.60 இலட்சம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்காக கட் டப்பட்ட புதிய பசுமை வீடு, செங்காளிபாளையம் ஊராட்சியில் ரூ.13.07 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, செஞ்சேரிபாளையத்தில் ரூ.9.56 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்பப்பள்ளி சுற்றுச்சுவர் என ரூ.46.69 இலட்சம் மதிப் பீட்டில் வளர்ச்சித் திட் டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இவற்றை ஆய்வு செய்தேன்.
இதனைத் தொடர்ந்து, குன்னத்தூர் பேரூராட்சி ஒளி விளக்கு நகரில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ரூ.2.10 இலட்சம் மானியத்தில் பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டேன் என்றார்.
ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிநாத், குன்னத்தூர் செயல் அலுவலர் ரே ணுகா, உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், செய்தியா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



