fbpx
Homeபிற செய்திகள்உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் - சட்டம் ஒழுங்கு நிலவரம்: உயரதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் – சட்டம் ஒழுங்கு நிலவரம்: உயரதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டம் – ஒழுங்கு நிலவரம், அதற்காக மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் பற்றி ஆலோசனை நடந்தது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்துறை செயலாளர் பிரபாகர், துறை சார்ந்த செயலாளர்கள், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு டிஜிபி தாமரைக் கண்ணன், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவா சிர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற் றுள்ளனர்.

தமிழகத்தை பொறுத் தவரை தற்போது சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருந்து கொண்டிருக்கிறது, அவ்வப்போது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாது காப்பை உறுதி செய்தல், வீடுகளில் தனியாக இருக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், காவல்துறையை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டம் கூடாத வகையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img