திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊரா ட்சி ஒன்றியம், மானுப்பட்டி பகுதிகளில், வேளாண்மை மற்றும் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார், மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினீத்.
அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட £ரம் மானுப்பட்டியில் பட்டு வளர்ச்சித்துறை மூலம் அரசு நிதி உத வியில் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்தில் தானியங்கி பட்டு நூல் நூற்பகம் அமைக்கப்பட்டது.
இந்த நிறுவனத்திற்கு மானியமாக ரூ.96.00 இலட்சம் வழங் கப்பட்டுள்ளது.
மானுப்பட்டி கிராமத் தில் விவசாயி தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மல்பெரி மற்றும் புழுவளர்ப்பு மனை மையங்களிலிருந்து இளம்புழுக்கள் பெறப்பட்டு 3 மற்றும் 4-ம் நிலை புழுக்கள் வளர்க்கப்பட்டு, கூட்டுப் புழுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
விவசாயிக்கு நடவு மானியமாக ரூ.23,625-ம், தனி புழுவளர்ப்பு மனை மானியமாக ரூ.87,500-ம் மற்றும் இலவச தளவா டங்கள் ரூ.52,500 மதிப் பீட்டிலும் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிசனம்பட்டி குட் டையில் ரூ.30,900 மதிப் பீட்டில் வேளாண் பொறி யியல் துறையைச் சார்ந்த இயந்திரங்களைக் கொண்டு 2 எக்டர் பரப்பளவில் தூர்வாரப்பட்டது.
இதன்மூலம், சுற்றுவட்டாரப் பகு திகளில் மழைநீர் சேகரிக் கப்படுவதால் கிணறுகளின் நீர்மட்டம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் பயிர்களின் பாசனப்ப ரப்பை அதிகரிக்க இயலும்.
விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களில் அதிக மகசூல் பெற இய லும். எதிர்வரும் மழை காலங்களில் மழை நீரை முழுமையாக சேகரித்து நீர் மேலாண்மையை கடை பிடித்து விவசாயிகள் பயன் பெற வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினீத் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே ளாண்மை) மகாதேவன், உடுமலைப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உமாதேவி, பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் மனீ ஷா, வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்து ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



