fbpx
Homeபிற செய்திகள்உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள்?

உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள்?

உடலின் பிட்னெஸ் பராமரிக்க வேண்டுமென்று பணத்தைக்கட்டி ஜிம்மில் சேர்ந்தாலும், ஒன்றிரண்டு மாதங்கள் கூட தொடர்ச்சியாக போக முடியாமல் நிற்பவர்களே அதிகம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

ஆனால், உடற்பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டால், எதுவும் சாத்தி யம் தான். அதற்கு கீழே பட்டிய லிடப்பட்டுள்ள நன்மைகளை பாருங்கள்.

மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்:
மகிழ்ச்சி தானே வாழ்க்கையின் குறிக்கோள்? அப்படியெனில், அதற்கு உடற்பயிற்சியும் உதவும்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவு, உடற் பயிற்சி செய்வதால், அமைதியான மனநிலையை உருவாக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர் ரசாய னங்களை உற்பத்தி செய்யும் நியூரான் செல்கள் புதிதாக உருவாவதாக சொல்கிறது.

உடற் பயிற்சிகளின் போது, மூளை உற்பத்தி செய்யும் நரம்புகளை தூண்டும் சில ரசாயனங்கள், வலி மற்றும் மனச்சோர்வு உணர்வை தற்காலிகமாக நிறுத்துவதும் தெரிய வந்துள்ளது.

மேலும், செரடோனின், டோபாமைன், நார் எபினெப்ரின் போன்ற மன அழுத்தத்தை குறைத்து சாந்தமான மனநிலையையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும் ஹார்மோன்கள் சுரப்பையும் உடற்பயிற்சி ஊக்கப்படுத்துகிறது. இந்த ரசாயனங்கள், நேர் மறை எண்ணங்களை ஊக்குவிக்கின் றன.

உடல் எடையை குறைக்கவும் பராமரிக்கவும் உதவும்: தற்காலத் தில், உடலுழைப்புக் குறைவாக இருப்பதே உடற்பருமன் அதிகரிப் பதற்கும், எடை கூடுவதற்கும் காரணமாக இருக்கிறது.

ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் உடற்பயிற்சிகள் செய்வது, உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கிறது. இதனால் நாம் உட்கொள்ளும் அதிகப்படியான கலோரி எரிக் கப்பட்டு விடுவது மட்டுமல்லா மல், உடலில் சேர்ந்துள்ள அதிகப் படியான கொழுப்பும் குறைகிறது. இதனால் இயற்கையாகவே

உடல் எடை குறைகிறது.
உறுதியான எலும்புகள், வலுவான தசைகள்:
உறுதியான தசைகள் மற்றும் எலும்புகளை பராமரிப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால் தான் போர்வீரர் களும், விளையாட்டு வீரர்களும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது அந்தக் காலத்தில் இருந்தே தொடரும் பழக்கமாக இருக் கிறது. இதைத்தான் இன்றைய அறிவியல் ஆய்வுகளும் உறுதிப் படுத்துகின்றன.

உண வில் போதுமான அளவு புரதச் சத்து உட்கொண்டு, எடை தூக்குதல் போன்ற பயிற்சிகள் மேற் கொண்டால், தசை வளர்ச்சியும், வலுவடை தலும் அதிகரிக்கும். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போதும் சுரக்கப்படும் சில ஹார் மோன்கள், உடல் தசைகள் அமினோ அமிலங்கள் சுரப்பதை ஊக்குவிக்கின்றன.

இது தசைகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, அவை சேதமடை வதை குறைக்கின்றன. எலும்பு கள் வலுவிழக்கும் ‘ஆஸ்டியோ போரோசிஸ்’ போன்ற பிரச்சினை கள் ஏற்படாமல் தவிர்க் கலாம்.

உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்:
உடற்பயிற்சிகள் செய்யும் போது உடலின் ஒட்டு மொத்த செல்களும் சுறுசுறுப் படைகின் றன. உடலின் சக்தி யோட்டமும், கழிவுநீக்கச் செயல் பாடுகளும் அதிகரிக்கிறது. செல் களின் செயல்திறன் அதிகரிக்கிறது.

இதன் விளைவாக, உடனடியான புத்துணர்வும், ஆற்றலும் கிடைக்கிறது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு உடல்நலப் பிரச்சினை கள் மற்றும் நோய் பாதிப்புகள் கொண்டோருக்கும் ஆற்றல் ஊக்கியாக உடற்பயிற்சி உதவும்.

இதுமட்டுமின்றி, நாட்பட்ட சோர்வால் பாதிக் கப்பட்டுள்ள வர்களுக்கு உடற்ப யிற்சியைவிட சிறந்த தீர்வு கிடையாது என்கின்றனர் மருத்துவர்கள். புற்றுநோய், எயிட்ஸ், மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ் போன்ற கொடிய நோய் பாதிப்புகள் கொண்டவர் களுக்கு கூட, உடற்பயிற்சி உதவு கிறது.

நாள்பட்ட நோய்களின் பாதிப்பு குறையும்:
நோயுற்று இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று பொதுவாக ஆலோசனை வழங்கப்படுகிறது.

ஆனால், அது முழு உண்மையல்ல. ஏனெனில், பல நாட்பட்ட நோய்கள் வருவதற்கு முதன்மை காரணமாக இருப்பதே குறை வான உடலுழைப்பு அல்லது போதுமான உடற்பயிற்சி இல் லாததுதான்.

புற்றுநோய், மூட்டுவலி, மனச்சோர்வு, பதற்றம் இப்படி பல நாட்பட்ட நோய் பாதிப்புகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி உதவுவதை, தொடர்ச்சியான ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

சருமப் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும்:
உடற்பயிற்சி, சருமத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால், சருமத்துக்கு அதிக அளவு ஆக்சிஜனும், ஊட்டச்சத்து களும் கிடைக்கிறது. இது சருமத்தில் ஏற்படும் சேதங்களை உடனடியாக சரிசெய்துகொள்ள உதவுவதுடன், ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்துக்கும் உதவு கிறது.

மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது:
உடற்பயிற்சியினால், மூளைக்கு செல்லும் ரத்தவோட் டத்தின் அளவு அதிகரிக்கிறது. இ தனால் மூளைக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. மேலும், உடற்பயிற்சியினால் தூண்டப் படும் ஹார்மோன் சுரப்புகள் மூளைச் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

வயதான காலத்தில் நினை வாற்றலையும். மனதின் செயல்திறனையும் அதி கரிக்கிறது. மேலும், முதுமையில் அதிகம் தாக்கும் அல்சீமர் மற்றும் மனச்சிதைவு நோய்ப் பாதிப்புகளையும் உடற்பயிற்சி குறைக்கிறது.

உடலுழைப்பு இல்லாத மந்தமான நிலையில் இருப்பவர்களைவிட, உடற்பயிற் சிகளில் ஈடுபடுகிறவர்களின் உடல் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் முதுமைக் காலத்தில் சிறப்பாக இருக்கிறது.

ஆழ்ந்த தூக்கத்தை அளிக்கும்:
உடற்பயிற்சியினால் உடல் ஆற்றலை செலவிடுகிறது. சோர்வ டைந்த உடல் விரைவாக ஓய்வை நாடுகிறது. இதனால் தூக்கம் தூண்டப்படுகிறது. தூக்கத்தின் போது உடல் சுத்திகரிப்பு வேலையைச் செய்கிறது.

இதனால் அடுத்த நாள் உற்சா கத்துடன் எழ முடிகிறது. அதனால் தான், தூக்கமின்மைக் குறைப்பாடு உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சியையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக ஆழ்ந்த தூக்கமே எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்.

முதுமையை தாமதப்படுத்துகிறது:
உடற்பயிற்சிகள் செய்வது உங்களை பல வழிகளிலும் இள மையாக உணரச் செய்கிறது. நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் உடல் ஒத்துழைக்கும்; நல்ல தூக்கம் உண்டாவதுடன் நாட்பட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடல் செல்களிலுள்ள மைட் டோகாண்ட்ரியா செயல் பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், முதுமையடைதலை தாமதப்படுத் துகிறது

உடற்பயிற்சி செய்து நமது வாழ்நாள்களை அதிகரித்து உடலும், மனமும் வலுப்பெற்று , மன சந்தோஷம் அடைந்து நோய் நொடி இல்லாமல் வாழ கட்டாயம் தவறாதுதொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.

உடற்பயிற்சி, உடலை ஆரோக் கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், இரத்தக் கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

கட்டுரையாளர்:
முனைவர் ஞா.ஆல்பர்ட் அலெக்சாண்டர்,
உடற்கல்வி ஆசிரியர்,
புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளி,
புலியகுளம், கோவை -45.

படிக்க வேண்டும்

spot_img