fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா துவக்கம்

ஈரோட்டில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா துவக்கம்

68-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் துவக்க விழா நேற்று (நவ.14) ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நடந்தது.

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளரும், கூட்டுறவு வாரவிழாக் குழுவின் தலைவருமான கே.ரேணுகா தலைமை தாங்கி, கூட்டுறவு கொடியினையேற்றியும் உறுதி மொழியினை வாசித்தும் விழாவினை துவக்கி வைத்தார்.

கூட்டுறவு வார விழாவின் முதல்நாள் ‘கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதிலும் சுகாதாரம் சார்ந்த கூட்டுறவுகளை வலுப்படுத்துவதிலும் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு’ எனும் நாளாக கொண்டாடப்பட்டது.

கூட்டுறவு வாரவிழாக் குழுவின் துணைத் தலைவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான மருத்துவர் சு.செந்தமிழ் செல்வி முன்னிலை வகித்தார்.

ஈரோடு சரக துணைப்பதிவாளர் கு.நர்மதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளரும் முதன்மை வருவாய் அலுவலருமான இரா.இராமநாதன், உதவி இயக்குனர் கைத்தறி மற்றும் துணிநூல் துறைட்டி.ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

கூட்டுறவுத் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கூட்டுறவு உறுதிமொழியினை ஏற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img