fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியின் வணிகத்தை அதிகப்படுத்த திட்டம்

ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியின் வணிகத்தை அதிகப்படுத்த திட்டம்

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் நடைமுறை மூலதனத்தில் இலாபம் ஈட்ட வங்கியின் வணிகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆய்வுக் குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யவும், செப்.30ல் முடிந்த காலாண்டிற்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது.வங்கியின் தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமையில் இக் கூட்டம் மத்திய வங்கி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் வங்கியின் நடைமுறை மூல தனத்தில் ஒரு சதவிகித அளவிற்கு இலாபம் ஈட்டும் வகையில் வங்கியின் வணிகத்தை அதிகப்படுத்திட வேண்டும். தற்போது விவசாயிகளுக்கு அதிக அளவில் பயிர்க்கடன் மற்றும் மத்திய காலக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

5 கோடிக் கும் குறைவாகக் கடன்நிலுவை உள்ள சங்கங்களின் கடன் நிலுவையினை உயர்த்திட வேண்டும். சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளில் அதிகஅளவில் வைப்புகள் சேகரிக்க வேண்டும் என்று தலைவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி யின் மேலாண்மை இயக்குநர் கூடுதல் பதிவாளர் மரு.சு.செந்தமிழ்செல்வி, திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், நபார்டு வங்கியின் ஈரோடு மாவட்ட வளர்ச்சி மேலாளர் டி.அசோக்குமார், திருப்பூர் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜு, கோபி சரகத் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா, ஈரோடு சரகத் துணைப்பதிவாளர் கு.நர்மதா, திருப்பூர் சரகத் துணைப்பதிவாளர் ஏ.ப்பி.முருகேசன், வங்கி முதன்மை வருவாய் அலுவலர் இரா.ராமநாதன், வங்கி பொதுமேலாளர் ஆர்.ரவிச்சந்திரன், ஈரோடு கைத்தறி அலுவலர் ந.ஜானகி, திருப்பூர் கைத்தறி அலுவலர் வெ.கஸ்தூரி, ஈரோடு கூட்டுறவுத் தணிக்கை அலுவலர் க.கதிர்வேல், ஊட்டி கூட்டுறவுத் தணிக்கை அலுவலர் திருமலைக் கண்ணன் மற்றும் வங்கிப் பணியாளர்கள் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img