செயிண்ட் – கோபைன், மைஹோம் ரேஞ்ச் என்பதன் கீழ், அதன் புத்தாக்க, இல்லங்களுக்கான தீர்வுகள் தொகுப்பை ஓட்டல் லீமெரிடியனில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகம் செய்திருக்கிறது.
செயிண்ட் – கோபைன் இந்தியா நிறுவனத்தின் செயலாக்க இயக்குனர் ஹேமந்த் குரானா கூறியதாவது: இந்தியாவில் செயிண்ட் – கோபைனுக்கு குறிப்பிடத்தக்க கணிசமான வாய்ப்பை இல்லங்களுக்கான பிரிவு வழங்குகிறது.
25 பில்லியனுக்கும் அதிகமான சந்தை அளவோடு 8-10 சதம் என்ற CAGR வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இப்பிரிவு, வேகமாக வளர்ச்சி காணும். மக்களுக்கு குடியிருப்பதற்கு வீடு தேவைப்படுகிறது.
பெரிய வீடுகளை வாங்குவதோடு, அவர்களது வீடுகள் மீது அதிக தொகையை செலவிடுகின்றனர். எமது ஹோம் சொல்யூஷன்ஸ் (இல்லங்களுக்கான தீர்வுகள்) அணி வரிசையை இன்னும் வளர்த்தெடுக்க முயற்சிகளை தீவிரமாக்கி வருகிறோம்.
ஒரு பெரிய அளவிலான களப்பணியாளர்கள் வழியாக இத்தீர்வுகளை இல்ல உரிமையாளர்களின் வீடுகளுக்கே எடுத்துச் செல்வது எமது நோக்கமாகும். நேரில் தொட்டு பார்த்து பெறும் இனிய அனுபவத்தை வழங்க இந்நாட்டில் நிலை 1 நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில், 2021-ம்ஆண்டு இறுதிக்குள் 50+ மைஹோம் ஸ்டோர்களை திறக்கவிருக்கிறோம்.
சென்னை, கொச்சி, மும்பை, கோவை ஆகிய நகரங்களில் இந்த ஸ்டோர்களை ஏற்கனவே தொடங்கியிருக்கிறோம். ஹோம் மற்றும் கட்டுமானப் பிரிவில் நிதியாண்டு 2022-2023-க்கு இடைப்பட்ட காலத்தில் 2500 கோடிக்கும் அதிகமான தொகையை செயிண்ட்-கோபைன் முதலீடு செய்யும் என்றார்.
செயிண்ட் – கோபைன் இந்தியா நிறுவனத்தின் பிசினஸ் ஹெட் கே.ஸ்ரீஹரி பேசுகையில், “இறுதி நிலை நுகர்வோர்களுக்கு நலவாழ்வு அம்சங்களை வழங்குவது மீதே எமது கூர்நோக்கம் இருக்கிறது.
பல புத்தாக்கமான தீர்வுகளையும் மற்றும் புதுமையான “கோடு மார்க்கெட்” வழி முறையையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.
ஜன்னல்கள் மற்றும் டவர் கியூபிக்கில்கள், வார்ட்ரோப்களுக்கான ஷட்டர்கள், கிச்சன் கேபினெட்கள், எல்இடி மிரர்கள் போன்ற மைஹோம் தீர்வுகள் மீது, வடக்கு கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளமை ஹோம் பிராண்டு ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் நேரடி அனுபவத்தைப் பெறலாம்,” என்றார்.



