fbpx
Homeபிற செய்திகள்இறக்குமதி நிலக்கரி விலை உயர்வால் சிமெண்ட் உற்பத்தி பாதிப்பு

இறக்குமதி நிலக்கரி விலை உயர்வால் சிமெண்ட் உற்பத்தி பாதிப்பு

தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் (SICMA) இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை உயர்வால் சிமெண்ட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:

கடந்த சில மாதங்களாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலையில் முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பு காணப்படுகிறது. பெட் கோக்குகள் எளிதில் கிடைப்பதில்லை.

தற்போதைய காலங்களில் கப்பல்கள் பற்றாக்குறை காரணமாக விலை உயர்ந்த நிலக்கரி மற்றும் பெட் கோக்குகள் கூட கிடைப்பதில்லை. நிலக்கரி மற்றும் பெட்கோக்கின் விலை மேலும் அதிகரிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக சிமெண்ட் உற்பத்தி மோசமாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
உற்பத்திச் செலவில் ஏற்படும் அதிகரிப்பு காரணமாக ஒரு சிமெண்ட் மூட் டைக்கு குறைந்தபட்சம் ரூ .60/- வரை உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் செலவில் மேலும் அதிகரிப்பு அல்லது கணிப்பது கடினமாக உள்ளது. இதன் காரணமாக தென்னிந்தியாவில் சிமெண்ட் உற் பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img