கோவையில் கேட்வே மருத்துவமனையில் மார்பக கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
கேட்வே மருத்துவமனை நிறுவனரும், மருத்துவருமான செந்தில் பத் திரிகையாளர்களிடம் கூறியதாவது:உலகின் மிகப் பெரிய வலது மார்பு சுவர் பைப்ரோமாடோசிஸ் கட்டி, வெற்றிகரமாக, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளாக வலது பக்க மார்புச் சுவரில் பெரிய வீக்கத்துடன், ராஜஸ்தானைச் சேர்ந்த 33 வயதான பெண் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
அவரது மார்பக கட்டி மெதுவாக வளர்ந்து கொண்டிருந்தது.
கடந்த 8 மாதங்களில் வளர்ச்சியின்அளவு தீவிரமாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து பரிசோதனைக்கு அவர் கோவை வந்தபோது, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நன்றாக இருக்கிறார்.இந்தக் கடின மான அறுவை சிகிச்சையை, எனது தலைமையில், கேட்வே மருத்துவமனையின் மருத் துவர்கள் மேற்கொண்டு, சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து குணப் படுத்தி உள்ளோம்.
இந்த கட்டியின் அளவு 30 X 30 செமீ. இச்சாதனையை லிம்கா புத்தகம் மற்றும் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.



