fbpx
Homeபிற செய்திகள்உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நெல்லை ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நெல்லை ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் பல்வேறு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தும் பொருட்டு, “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் முகாம் ராதாபுரம் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டத்தில் நடைபெற்றது.

அப்போது, நாங்குநேரி வட்டத்தில் “உங்க ளைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர் களும் நாங்குநேரி வட்டத்திற் குட்பட்ட பகுதிகளுக்கும் சென்று, ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் பூலம் ஊராட்சி வாகைகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கல்வித் தரத்தை கேட்டறிந்து ஸ்மார்ட் வகுப்பு நடைபெறுவதையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து, மறுகால்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை பார்வையிட்டு மாணவர்களின் வருகை குறித்தும், பள்ளியில் உள்ள அடிப்படையான வசதிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும், கிராம சேவை மையக்கட்டத்தில் இலங்குளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (சேலஞ்ச் வீட்டு உப யோக பொருட்கள் தயாரிப்பு தொழில் குழு) மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக பொருட்களான பினாயில், வாசனைப்பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் தையல் பயிற்சி வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மூலைக்கரைப் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் கட்டிடம் ரூ.22.70 லட்சம் மதிப்பீட்டில் கனிமம் மற்றும் சுரங்கம் உரிம கட்டணம் திட்ட மூலம் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன், திறந்து வைத்தார்கள்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் நாங்குநேரி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன், தெரி வித்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img