தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் முடிதானம் விழிப்புணர்வு பேர ணியை பொது மேலாளர் அசோக்குமார் துவக்கி வைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலை முடியை இழந்த பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முடிதானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கார் மூலம் பெண்கள் மட்டுமே சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
தூத்துக்குடியில் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் கிளை அமைப்பாக செயல்பட்டு வரும் பியர்ல் சிட்டி குயின் பீஸ் என்று மகளிர் மட்டும் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த அமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியுடன் இணைந்து பியர்ல் சிட்டி குயின் பீஸ் அமைப்பு தலைவர் மதுமிதா தலைமையில் 20 மகளிர் பங்கேற்ற புற்று நோயால் பாதிக்கப்பட்டு தலைமுடியை இழந்து வீட் டிலேயே முடங்கி கிடக்கும் பெண்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் விதமாக அந்த பெண்களுக்கு முடியை தானமாக வழங்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கார் பயணம் தூத்துக் குடியில் இருந்து துவங்கியது.
முன்னதாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குயின் பீஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முடி தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு நாடகத்தையும் கலை நிகழ்ச்சி மூலம் நடத்தி காண்பித்தனர்.
இந்த விழிப்புணர்வு கார் பயணம் தூத்துக்குடியில் இருந்து இன்று துவங்கி திருநெல்வேலி, கன்னி யாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நடை பெறுகிறது. இந்த நான்கு மாவட்டங்களில் பொதுமக்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் முடிதானம் குறித்து வருகிற 23ஆம் தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இந்த விழிப்புணர்வு கார் பயணத்தை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பொது மேலாளர் அசோக் குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் டிஎஸ்எப் டைரக்டர் சந்திரா பிஎஸ் டிஎஸ் ஷிப்பிங் சர்வீஸ் அர்ஜுன் சங்கர் ஜே சி ஐ தலைவர் பாலா நிர்வாகிகள் ஜெயபால் சுப்புராஜ் ஏராளமானோர் கலந்து கொண்டு பெண்களின் முயற்சியை பாராட்டினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மதுமிதா திட்ட தலைவர் அஜிதா பிரபுஉடனடி முன்னாள் தலைவர் வழக்கறிஞர் சுபாஷிணி, துணை தலைவர் சத்யா, பட்டைய தலைவர் ஜெர்லின், டைரக் டர் ஆயிஷா, செயலாளர் லோ லோபன் சினா பொருளாளர் திவ்யா, மேலும் உறுப்பினர்கள் சோபியா, சுஜாதா, நர்மதா, வெரோனிகா, தனம், கௌசல்யா, அகஸ்டா, ஷெர்லின், மலர், பாவனா, ரதிமலா, அகிலா, ஷர்மிளா, யோகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.