52வது இந்திய சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி திருப்பூரில் வருகின்ற 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பசுமையை முன்னிறுத்தும் வகையில் சுற்றுச்சூழல் நிலைக்கு ஏற்ற வகையிலான உற்பத்தி என்பதை முன்னிலைப்படுத்தி காட்சிப்படுத்த இருப்பதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவரும், சர்வதேச பின்ன லாடைக் கண்காட்சி தலைவருமான சக்திவேல் பேட்டி அளித்துள்ளார்.
இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து அவர், மிகவும் முக்கியமான காலத்தில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருப்பூரில் நடைபெறுகிறது. அமெரிக்க வரி விவகாரத்தால் அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையும். இங்கி லாந்துடன் போடப்பட்டுள்ள வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் 2 மாதத்தில் முழுமை யாக நடைமுறைக்கு வர உள்ளது. இச்சூழலில் இதுவரை 7,000 முதல் 8,000 கோடி ரூபாய் வரை யில் அந்நாட்டுடன் வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில் உடனடியாக அது இரட்டிப்பாகும்.
அதேபோல் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுடன் விரைவில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உடன்படிக்கையாக உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் உடன் படிக்கை ஏற்பட்டுள்ள நிலையில் நடைபெற உள்ள 52 வது சர்வதேச பின்னலாடை கண்காட்சிக்கு ஆஸ்தி ரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக ஏஜென்சியை சேர்ந்தவர்கள் வருகை தர உள்ளனர். அமெரிக்க அரசு வரி அதிகப்படுத்தி இருந்தாலும் அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியா உடனான வர்த்தகத்தையே விரும்புகின்றனர். அமெரிக்க அரசும் அதனை உணர்ந்து வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்தியா எங்கள் நட்பு நாடு என மீண்டும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்னும் 3 வாரங்களுக்குள்ளாக அமெரிக்க அரசிடம் இருந்து நல்ல அறிவிப்பு வெளியாகும். திருப்பூரில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு சில நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருவோம். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இடர் பாடுகளையும் களைந்து 15 சதவீதம் ஏற்றுமதி அதிகரிக்க செய்த 50 ஆயி ரம் கோடி இலக்கை எட்டுவோம்.
அமெரிக்க வரி விவகாரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியினால் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு வரி விலக்கு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மேலும் அமெரிக்கா உடனான வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைக்கான போகஸ் சந்தை திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி வரிச்சலுகை வழங்க வலியு றுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணி யன் கூறுகையில், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வர்த்தகர்கள் திருப்பூர் ஆயத்த ஆடை துறையினரிடைய வர்த்தகம் மேற்கொள்வதற்கு திறவுகோலாக இந்த கண்காட்சி அமையும்,என தெரிவித்தார்.



