fbpx
Homeபிற செய்திகள்பல்துறை போட்டிகளில் பரிசுகள் குவித்த தி ஃப்ரண்ட்லைன் பள்ளி

பல்துறை போட்டிகளில் பரிசுகள் குவித்த தி ஃப்ரண்ட்லைன் பள்ளி

கோவை நேரு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கலை மற்றும் அறிவியல் நிகழ்ச்சிகளில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி ஃப்ரண்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்துறைகளில் வெற்றி பெற்றனர்.

எழுபது பள்ளிகளிலிருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இந்த விழாவில், ஒன் பதாம் வகுப்பு மாணவிகள் தேஷிகா மற்றும் சனா பார்க் ஹீன் ஆகியோர் புதிய வணிகத் தொழில் நுட்பக் கருவி கண்டுபிடித்ததற்காக மூன்றாம் பரிசு (ரூ.5000) பெற்றனர்.

மெஹந்தி போட்டியில் பதினோராம் வகுப்பு மாணவிகள் மம்தா மற்றும் நட்சத்திரா மூன்றாம் பரிசு (ரூ.1000) பெற்றனர். குறுநேர வீடியோக்கள் உருவாக்கும் போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹரி பிரகாஷ் மற்றும் ஜனார்த்தனகிரி ஆகியோர் இரண் டாம் பரிசு (ரூ.1500) பெற்றனர்.

பரிசு பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், இணைச் செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளி முதல்வர் டாக்டர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img