fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளியில் மாணவர் மன்றம் தொடக்கம்

சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளியில் மாணவர் மன்றம் தொடக்கம்

சிதம்பரம் ஷெம்போர்டு சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவர் மன்றம் (2025-26) தொடக்க விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக சிதம்பரம் மாவட்ட சாரணர் அமைப்பு ஆணை யர் வேலாயுதம் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் எஸ்.சி,எஸ்.டி நிதி பரிந்துரை குழுவின் மாநில குழு உறுப்பினராகிய முனைவர் தில்லைசீனு விழாவில் பங்கு கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினார். பள்ளியின் செயலர் அரிகிருஷ்ணன் மற்றும் சத்யப்பிரியா கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் லதா வரவேற்றார். விழாவில் 4 இல்லங்களான கலாஷேத்ரா, சாந்தி நிகேதன், நாலந்தா, தக்ஷசிலா ஆகியவற்றின் அணிவகுப்பு தொடங்கியது. மாணவர்கள் ஒழுங்கு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அணிவகுப்பு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img