fbpx
Homeபிற செய்திகள்சிஸ்பா, ஆர்.டி.எஃப் இணைந்து நடத்திய இபிஎஃப் திட்ட கருத்தரங்கு

சிஸ்பா, ஆர்.டி.எஃப் இணைந்து நடத்திய இபிஎஃப் திட்ட கருத்தரங்கு

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் மற்றும் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு இணைந்து, “தற்போதைய பருத்தி நிலவரம், இ.பி.எப் தொடர்பான புதிய திட்டங்கள் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்கள்” என்ற தலைப்பில் ஒரு இணையற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை, 20.01.2026 அன்று கோயம்புத்தூர் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் நடத்தியது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக, சிஸ்பாவின் கௌரவ செயலர் ஜெகதீஸ் சந்திரன் வரவேற்புரை வழங்கி, நிகழ்ச்சியின் நோக்கம், தற்போதைய தொழில்துறை சூழல் மற்றும் இத்தகைய கலந்து ரையாடல்களின் அவசியம் குறித்து விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து, சிஸ்பாவின் தலைவர் அருண்கார்த்திக், பருத்தி சந்தை நிலவரம், சட்ட இணக்கம் சார்ந்த சவால்கள் மற்றும் உறுப்பினர் மில்களின் நலனுக்காக சிஸ்பா தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்பின்னிங் மில் உரிமை யாளர்கள், மூத்த நிர்வாகி கள் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் பருத்தி நிலவரம் குறித்து சிஸ்பா தலைவர் அருண்கார்த்திக், காட்டன் கார்ப்ரேஷன் பொது மேலாளர் ஜெயகுமார், இந்திய காட்டன் பெடரேஷன் கௌரவ செயலாளர் நிஷாந்த் ஆசர் ஆகியோர் பேசினர்.

இ.பி.எப் சமீபத்திய திட்டங்கள் குறித்து சிஸ்பா துணைத் தலைவர் வெங்கடேசனும், பிராந்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் பிரசாந்த், வருங்கால வைப்பு நிதித் துறையின் அமலாக்க அதிகாரி சீனிவாசன் ஆகியோர் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவான விளக் கக்காட்சியை வழங்கினார்.

ESIC திட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் – தொழிற்சாலைகள் சட்டம் குறித்து ஜெகதீஷ் சந்திரன் கௌரவ செயலாளர் சிஸ்பா, கார்த்திகேயன் துணை இயக்குநர் இ.எஸ்.ஐ.சி, அருள் கூடுதல் இயக்குநர் (ஓய்வு) தொழிற்சாலை பாது காப்பு, டாக்டர் வில்லிங்டன் ஜெபராஜ் மனித வள – சட்ட ஆலோசகர் ஆகியோர் பேசினர்.

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் (RTF) தலைவர் எம் ஜெயபால், சிஸ்பாவின் துணைத் தலைவர் பிரதீப், வருங்கால வைப்பு நிதி ஆணையர் பிரசாந்த் ஆகியோர் நிறைவாக பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img