fbpx
Homeபிற செய்திகள்தாரமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆய்வு

தாரமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆய்வு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா.பிருந்தாதேவி செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இச்செய்தியாளர் பய ணத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது:
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த நாலரை ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.121.56 கோடி மதிப்பீட்டிலான 3,914 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 3,633 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 281 பணிகள் நடைபெற்று வருகின்றன.


அந்தவகையில், இன்றையதினம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், துட்டம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் மந்திவளவு மற்றும் வனிச்சம்பட்டி அங்கன்வாடி மையக்கட் டிடங்கள் கட்டும் பணியினையும், பாப்பம்பாடி ஊராட்சியில் ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும், எலவம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் தலா ரூ.4.88 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


மேலும், எலவம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் தலா ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் நாச்சம் பட்டி அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டும் பணியினையும், ஆரூர்பட்டி ஊராட்சி, பழக்காரனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நாற்றங்கால் மூலம் உற்பத்தி மற்றும் ரூ.2.84 லட்சம் மதிப்பீட்டில் மரத் தோட்டம் அமைக்கப்பட்டு வருவதையும், ஆரூர்பட்டி ஊராட்சி, சேடபட்டியில் ரூ.78.20 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், மானாத்தாள் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப் பட்டுள்ளதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img