fbpx
Homeபிற செய்திகள்ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள் ளியில் சாலைப் பாது காப்பு செயற்பாடு நிகழ்த்தப்பட் டது. இதில் உயிர், குட் டிக் காவலர் இயக்கம் சாரண, சாரணியர் படை ஆகிய இயக்கங்களைச் சார்ந்த எழுபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உயிர் இயக்கத்தின் கல்விசார் ஒருங்கிணைப்பாளர் கே.பாலு என்கிற பாலசுப் பிரமணியம் இந்நிகழ்வை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் கோவை கிழக்கு போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் ஆலோசனையில், உதவி ஆய்வாளர் கனகராஜ் ஒருங்கிணைத்தார்.

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முதல்வர் ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் துணை முதல்வர்கள் திவாகரன், பிரியா சீன் மற்றும் ஆசிரியர் பெரு மக்கள் கலந்து கொண்டனர். இதில் காவல் உதவி ஆய்வாளர் கனகராஜ் பேசு கையில், “மாணவர்கள், வாகனங் களை இயக்குவதை அறவே தவிர்க்க வேண் டும். தலைக்கவசம் அவசியமானது.

அதிகாலையில் பள்ளி நேரத்திற்கு முன்பாகவே வீட்டிலிருந்து புறப்படு வதால் விபத்துகளைத் தவிர்க்கலாம்“ என்றார்.

மேலும் வாகனக்காப் பீடு, பாது காப்பான பயணம் விபத்துகளின்போது நீதி மன்றச் செயற்பாடுகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.

மிக எளிமையாகப் புரியும்படி மாணாக்கர்களிடம் கலந்துரையாடினார்.

மாணவர்கள் பேரணி யாகச் சென்று, எல்.ஐ.சி போக்குவரத்து நிறுத்தத்தில் நின்று, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தலைக்கவசம் அணிதல் இருக்கைப் பட்டை அணிதல் ஆகியவை குறித்து வாகன ஒட்டிக ளிடம் மாணவர்கள் வலியுறுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img