உலகளாவிய சின்மயா மிஷன் அமைப்பின் 75 ஆம் ஆண்டு சிறப்பு கொண்டாட்டங்களின் தொடர் நிகழ்வு மற்றும் சின்மயா யுவகேந்திரா அலுமினி என்ற இளைஞர்களின் அமைப்பின் 50வது ஆண்டின் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள பகவத் கீதை தமிழ் சுலோகங்களின் வெளியீட்டு விழா கோவை ஆர்.எஸ்.புரம் மாருதி கால சபா ஆடிட்டோரியத்தில் வருகிற நவம்பர் 1ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
விழாவிற்கு சென்னை சின்மயா மிஷன்சுவாமி மித்ரானந்தா தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
மேற்கண்ட தகவலை கோவை சின்மயா மிஷன் நிர்வாகி அனுகூலானந்தா தெரிவித்துள்ளார்



