மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஐ.என்.டி. யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில் இன்று காலை 10 – மணிக்கு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு தேசிய பஞ்சாலை தொழிற்சங்க தலைவரும் மாநில ஐ.என்.டி.யு.சி பொதுச் செயலாளருமான கோவை செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் காங்கிரஸ் பிரிவு தலைவர் பார்த்திபன், சர்க்கிள் தலைவர் கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் செரி லூயிஸ், காலனி ஜனார்த்தனன், சகாயராஜ், செல்வராஜ், காந்தி பாபு, லோகநாதன், ஒலம்பஸ் நடராஜ். விகேஎல்.கிருஷ்ணன், ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டஅனைவரும் ராஜீவ் காந்தியின் நினைவாக வன்முறை கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.