fbpx
Homeபிற செய்திகள்கோவை ப்ரோ ஜோன் மாலில் மாபெரும் உணவு திருவிழா 2023 துவக்கம் !

கோவை ப்ரோ ஜோன் மாலில் மாபெரும் உணவு திருவிழா 2023 துவக்கம் !

கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோ ஜோன் மாலில் மாபெரும் உணவு திருவிழா 2023  வெகு விமர்சையாகஇன்று தொடங்கியது.  
இந்த உணவுத் திருவிழா வெள்ளி, சனி, ஞாயிறு (19, 20, 21) ஆகிய  மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இந்த உணவுத் திருவிழாவில் தென்னிந்திய, வட இந்திய, சைனீஸ், தந்தூரி, சைவ மற்றும் அசைவ உணவு வகைகளுக்காக  50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த உணவு திருவிழாவை முன்னிட்டு, சம்மர் ஹோலிக் 2003 கிராண்ட் பைனல் எனும் பெயரில்  பாட்டுப் போட்டி, நடன போட்டி, மற்றும் பேஷன் ஷோ ஆகியவற்றிக்கான இறுதி  போட்டிகள்  இந்த மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மேலும்,  குழந்தைகளுக்கு பிரத்யேகமாக விளையாட்டு மற்றும்  பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த உணவு  திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அப் டவுன் கன்பிட்டி    மற்றும் புட்லூஸ்  நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியில்  ப்ரோசோன் மால்  நிறுவனத்தின் சார்பாக தலைமை மேலாளர் நிர்வாகம் மற்றும் பைனான்ஸ் அதிகாரி  பாபு, மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி பிரின்ஸ்டீன்  நாதன், ஆப்ரேஷன் தலைமை அதிகாரி  முஜாமில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img