இந்தியாவின் மிக பிரபல பீஸா நிறுவனமான பீஸா ஹட் பத்து வித சுவைகளில் புதிய பீஸாக்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி மஜேதார் மக்னி பனீர், தாபே டா கீமா, சீஸி மஷ்ரூம் மேஜிக், மெக்சிகன் ஃபீயஸ்டா, அமெரிக்கன் சீஸி மற்றும் நவாபி முர்க் மக்னி உள்ளிட்ட பத்து கவர்ச்சிகரமான மற்றும் தனித்துவமான சுவைகளில் பீஸா வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதினா மயோ, டெக்சாஸ் பூண்டு போன்ற பிரபலமான ஜீ-லோக்கல் சுவைகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாஸ்களை தாராளமாகச் சேர்த்து பீஸாக்கள் இன்னும் மெலிந்ததாகவும், விரும்பத்தக்கதாகவும் செய்யப்படுகின்றன.
பீஸா ஹட் இந்தியாவின் சந்தைபடுத்தும் முதன்மை அலுவலர் ஆனந்திதா தத்தா கூறுகையில், “நம்முடைய பசிக்கான உணவை தீர்மானிப்பதில் நமது உணர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாடிக்கையாளர்களின் வெவ்வேறு மனநிலைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு மாறுதல்களை வழங்க விரும்புகிறோம்.
முதன்முறையாக 10 புதிய பீஸாக்களை மனம் கவர்ந்த சுவையான உட்பொருட்களுடன் அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளோம். இவை அனைத்தும் மலிவான விலையில் கிடைப்பதால் உண்மையிலேயே மனதுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன” என தெரிவித்துள்ளார்.



