fbpx
Homeபிற செய்திகள்உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்ய 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம்

உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்ய 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம்

உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்ய 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட் டத்தின் கீழ் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, கல்லூரி கனவு புத்தகத்தை மாணவ -மாணவிகளுக்கு வழங் கினார்.

தொடர்ந்து அவர் பேசு கையில், “12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கல்லூரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் போன்ற ஏதேனும் ஒரு உயர் கல்வியை அடைவதே கல்லூரி கனவு திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாவட்டத்தில் விளிம்புநிலை மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஏதே னும் ஒரு உயர்கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி கடனுதவி மேலும் உயர்கல்வியில்
பிரிவு வாரியான பட்டப்படிப் புகள், பட்டயப்படிப்புகள் என் னென்ன உள்ளன என்பது குறித்தும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை களின் மூலம் உயர்கல்வியின் போது வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்தும், வங்கியாளர்கள் மூலம் உயர் கல்விக்கு தேவையான கல்வி கடனுதவி பெறுவது குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப் பட்டு, மாணவர்களின் தரவுகளை சேகரிப்பதுடன் அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி உயர்கல்வி சேர்க்கை உறுதி செய் யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள் ளாத மாணவர்களை, இதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு ஆசிரியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அவர்க ளுக்கும் உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
எனவே மாணவ, மாணவிகள் உயர்கல்வியை பெறுவதற்கு பெற்றோர்கள் முழு உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் கல்வி மூலமாகதான் மாற்றத்தை பெற முடியும்“ என்றார்.
இதில் மாநகராட்சி ஆணையாளர் அனு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஞானசங்கர், துரைபாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img