fbpx
Homeபிற செய்திகள்என்.ஜி.பி.இன்ஸ்டிடியூட் ஆண்டு விழா

என்.ஜி.பி.இன்ஸ்டிடியூட் ஆண்டு விழா

டாக்டர் என்.ஜி.பி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 15-வது ஆண்டு விழாவை கொண்டாடியது. அறங்காவலர் டாக்டர் அருண் என்.பழனிசாமி தலைமை வகித்தார்.

கே.எம்.சி.ஆர்.இடி முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் ஓ.டி.புவனேஸ்வரன் வரவேற்றார். முதல்வர் டாக்டர் எஸ்.யு.பிரபா ஆண்டறிக்கை வாசித்தார்.
துணை இயக்குநர்மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச் சகம், துணை இயக்குநர்/விஞ்ஞானி, பாலகிருஷ்ணா இஸ்லாவத் பேசியதாவது:

வாழ்த்துரை

மாணவர்களும் ஆசிரியர்களும் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் ஆவதற்கு தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறைகளில் ஏராளமான நிதி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் உள்ளன என்றார். தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி, செயலாளர் டாக்டர் தவமணி டி.பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ்.ஜெகநாதன், தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.கிருஷ்ணமூர்த்தி விழாவை ஒருங்கிணைத்தனர்.

ஆசிரியர்கள், மாணவர்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டன. 325 பேருக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img